Wednesday, December 7, 2011

ஆக்ரமிப்பில் பாகியாத் மேலும் சில தகவல்கள்

பாக்கியாத் குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு காஷிபுல் ஹுதா அரபுக்கல்லூரியிலிருந்து பதிலாக சொல்லப் பட்ட் செய்திகளை சமநிலைச் சமுதாய்ம் என் பார்வைக்கு கொண்டு வந்த்து.

பெரியமனிதர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு சிலர் தங்களை தாங்களே தூய்மைப் படுத்திக் கொள்ள் முயலும் கூச்சமற்ற அனுகு முறையை தவிர அதில வேறு எதுவும் இல்லை.

நம்முடைய நோக்கம் எந்த பெரிய மனிதரின் புகழையும் சிதைப்பதல்ல. பெரிய மனிதர்கள் பெரியமனிதர்களாக நடந்து கொள்ளாத போது சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பை வெளிப்படுத்திக் காட்டுவதேயாகும்.

தென்னிந்தியாவின் மூத்த் முன்னோடி சமய நிறுவனத்தை ஒரு சிலர், கூட்டணி அமைத்துக் கொண்டு எப்படி சிதைதுக் கொண்டிருக்கிறாகள் என்ற கவலை கடந்த பல வருடங்களாக தென்னிந்திய ஆலிம்களை வதைத்துக் கொண்டிருந்த்து. அது ஒட்டு மொத்தமாக ஒரு கட்டுரையில் பொங்கி வழிந்துள்ளது என்பதே அக்கட்டுரையின் பின்ன்னியில் உள்ள நிஜமாகும். இன்னும் அதில் சொல்லப்பட வேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு என்றாலும் கோடிகாட்டும் ஒரு முயற்சியாகவே அந்த அளவோடு அது நிறுத்திக் கொள்ளப்பட்ட்து. இதற்கு பதிலளிக்கிறோம் பேர்வழி என்ற வகையில் இறங்கியிருக்கிற காஷிபுல் ஹுதா அரபுக்கல்லூரியை சார்ந்தவர்கள் தங்களது தப்பார்ட்டத்தை நிறுத்திக் கொள்வது பற்றி யோசிக்காமல் – கடந்த இருபது வருடங்களாக பாகியாத்தை அக்கிரம்மாக கோலோட்சிய தங்களது அதிகாரம் பறிபோய்விடக்கூடும் என்ற பதற்றத்தில் கண்ட்தையும் வாரிக் கொட்டியுள்ளார்கள்.

அவர்கள் பாகியாத்தில் எந்த அளவு குறுக்கீடுகிறார்கள் என்பதற்கான அடையாளமாக அவர்களது விளக்க்க்க்க்க்க்க்கம் அமைந்திருக்கிறது.

இது குறித்து என்னிடபேசிய அனைத்து வாசகர்களும் இதே கருத்தை முன்வைத்தனர். “அப்பன் குதிருக்குள் இல்லை என்பதற் கொப்ப” என்ற சொல வாடையை இன்னும் சிலர் சேர்த்துக் கொண்டனர்.

காஷிபுல் ஹுதாவின் சகவாசக் கோளாரால் தனித்து நிற்கிற விரல் விட்டு எண்ணும்படியான ஓரிருவரைத் தவிர தமிழக பாகவிகள் – மற்றும் தமிழக ஆலிம்களின் ஒட்டுமொத்த உணர்வின் வெளிப்பாடாக அமைந்த அக்கட்டுரை உண்மையா? புனைவா? என்பதை இனி வருகிற காலம் நிஜப்படுத்தும் .

பொது வாசகர்களுக்கு தேவையற்றதுது என்பதனாலும் இந்தப் பிரச்சினையை சமுதாய அரங்கிற்கு எடுத்துச் செல்ல பாகவிகள் முன்வந்து விட்ட்தனாலும் இந்த விவாகாரத்திலநான அதிகப்படியாக நுழைய நான் விரும்பவில்லை. எனினும் சில அத்தியாவசியமான செய்திகளை சொல்லாமல் இருக்க கூடாது என்பதற்காக ஆக்ரமிப்பில பாகியாத் கட்டுரையின் பின் இனைப்பாக இந்த தகவலகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாகியாத்தின் போக்கு (மஸ்லக்) என்ன என்பதற்கு பல்லாயிரக்கணக்கான பாகவிகள் உயிருள்ள சாட்சிகளாக இருக்கிற போது சூரியனுக்கு டார்ச் அடிக்கிற கதையாக மௌலானா யாகூப் விஷாரமி பாகியாத்தின் மஸ்லக்கிற்கு ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்.

சில விடலைகளை வைத்துக் கொண்டு, அவரை மட்டுமே மதிக்கிற பணக்காரர் ஹாஷிமை முறைகேடாக பயன்படுத்தி அவர் செய்யும் முயற்சிகளை இனி மக்கள் அரங்கில் சந்திக்க வேண்டிய பொறுப்பு பாகவிகளுடையது மட்டுமல்ல தமிழக ஆலிம்களுடையது. தமிழக் ஆலிம்களில் பெரும்பாலோர் பாகயாத்தின் நேரடியான அல்லது மறைமுக வாரிசுகளே.

தேவ்பந்தின் மீதான மரியாதை, தப்லீக்கை தீவிரமாக அமைப்பு ரீதியாக எதிர்க்காமல் இருந்த்து ஆகிய இரண்டும் பாகியாத்தின் போக்கு என்பதை சமநிலை ச்முதாயத்தின் கட்டுரை தெளிவாக பேசுகிறது. அதே கோணத்தில் அமைந்த சில துக்கடா விச்யங்களை வைத்துக் கொண்டு பாகவிகளையும் தமிழக ஆலிம்களையும் ஒன்றும் அறியாதவர்களாக கருதி எதிர்திசையில் இழுத்துச் செல்ல காஷிபுல் ஹுதா கார்ர்கள் செய்யும் முயற்சி ஆகாசத்தில் கோட்டை கட்டும் முயற்சியே! தமிழக வாசகர்கள் அனைவருமே அரைத்தூக்கத்தில் தஃலீம் கேட்பவர்களைப் போலவே இருப்பார்கள் என்று எப்படி கருதத்துணிகிறார்கள் என்பதே எனக்கேற்பட்ட வியப்பு.

“ஆக்ரமிப்பில் பாகியாத்” கட்டுரை குறித்து பாகியாத் என்ன சொல்கிறது, அங்குள்ள ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் நான் முதலாவதாக எதிர்பார்த்த்தேன். “ஓரே ஒரு திருத்தம் தேவை என்பதைத் தவிர மற்றதெல்லாம் சரியே!“ என்பது தான் எனக்கு அங்கிருந்து கிடைத்த ஆதாரப்பூர்வமான பதில். அந்த திருத்தம் கூட கட்டுரையின் வாத்த்திற்கு தேவையற்றது என்பது எனது கருத்து.

பாகவிகள் சிலரின் பெயரைப் பயன்படுத்தியே காஷிபுல் ஹுதா மறுப்பு வெளியிட்டிருக்கிறது அதுதான் இவர்கள் எப்படிப்பட்ட்வர்கள் என்ற யோக்கியதாம்சத்தை உலகிறகு வெளிப்படுத்தும் அம்சம். பாவம்! வயது முதிர்ந்த காலத்தில் சில பெரிய மனிதர்களும் கூட பொடியன்களுக்கு பினாமிகளாக இருக்கும் நிலை ஏறபட்டிருக்கிறது.

அதில் பெயர் போடப்பட்டுள்ள ஒருவர் இதில் எங்களுக்குச் சம்மபந்தமில்லை ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காத குறையாய புலம்பியிருக்கிறார். “கோள் சொல்லுவதையே வாடிக்கையாக கொண்ட இந்த ஷைகுல் ஜாமிஆ இங்கிருந்து போனால் தான் இந்த மதரஸா உருப்படும் என்று தங்களது பிதாமகரைப் பற்றி அங்கிருந்தே ஒரு பாகவி கூறினார். பாகியாத்தில் ஒரு நாள் தண்ணீர் குடித்திருந்தால் கூட யாரும் பாகியாத்திற்கு எதிரான கூட்டணியில் இணைய மாட்டார்கள் என்பது திரும்பவும் நிஜப்பட்ட நிகழ்வு அது.

அக்கட்டுரையில் இருப்பதெல்லாம் தவறான செய்திகள், உண்மைக்கு மாற்றமானவை. ஹாஷிம் ஒரு உத்தமர், யாகூப் மௌலான ஒரு உயர்ந்த மனிதர் என்றெல்லாம் தனிநபர்களின் புகழ்பாடிய நல்ல பிள்ளைகள், பாகியாத் இப்போது எப்படி இருக்கிறது? தமிழகத்தில் கட்டிடம் இருக்கிறது என்பதை தவிர வேறு எந்த அங்கீரமும் இல்லாத மேல்விஷாரத்தின் விடுதியிலிருந்து திரும்பிச் செல்கிறவர்களை பாகியாத்தின் ஆசிரியர்கள் லெட்டெர் எழுதிக் கொடுத்து இழுத்து வரவேண்டிய நிர்பந்த்தம் பாகியாத்திற்கு ஏன் ஏற்பட்ட்து என்பதை கடைசி வரை விளக்கவே இல்லை.

உங்களது ம்தரஸாவிலிருந்து திரூப்பி அனுப்ப்ப் படுகிறவர்களை எங்களிடம் அனுப்பி வையுங்கள் என்ற கோரிக்கையை தமிழகத்தின் வேறு எத்தனை மதரஸாக்களுக்கு பாகியாத்திலிருந்து அனுப்ப்பட்ட்து? லால்பேட்டைக்கு அனுப்பினார்களா? நீடூருக்கு அனுப்பினார்களா? என்ற கேள்வியை மௌலானா அப்துர ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையிலான குழு கேட்மாமல் விட்டுவிட்ட்தா? அல்லது இதை எல்லாம் சரிதான் என்று கருதும் அளவுக்கு இவர்களது உள்ளம் அவ்வளவு இறுகியதா?

மாட்டுத் தோலை கணக்கிடக்கிடத்தெரிந்த அளவுக்கு கூட பாகியாத்தின் மரியாதயை கணக்கிட் பாகியாத்தின் செயலர் ஹாஷிமுக்கு தெரியவில்லை என்பது மட்டும் உறுதியாக புரிகிறது. திறமை மிக்க பாகவிகள் நட்சத்திரங்களைப் போல நிறைந்து கிடக்கிற போது யாரெயெல்லாம் ஆசிரியராக அவர் தேடுகிறார் பாருங்கள்? தமிழ் கூறும் உலகறிந்த ஒஎம் அபதுக் காதிர் பாகவியை பாகியாத்தின் பேராசிரியராக சேர்க்க அப்போதைய முதல்வர் கமாலுத்தீன் ஹ்ஜரத் கூறிய போது யாகூப் மௌலானாவுக்கு அவரை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் ஹாஷிம் நிராகரித்தார். இப்போது கேட்டுப் பாருங்கள் ஓ எம் அப்துல் காதிர் பாகவியா அவர் யாரென்று கேட்பார்?

ஹாஷிம் இப்போது பலதையும் மறந்து விட்ட்து போல பேசுகிறார். நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள முயல்கிறார். தற்போதைய ஆசிரியர்களிடம் இரக்சிய மன்னிப்பு கேட்கும் அளவு இறங்கி வருகிறார் என்று எனக்கு தகவல் வருகின்றனர். ஆனால் பாகியாத்தின் பேராசிரியப்பெருமக்களாக இருந்தவர்களிடம் அவர் முன்பு நடந்து கொண்டவிதம் பாவகரமானது.

பாகவிகள் பொய் சொல்கிறார் என்று ஹாஷிம் புலம்புகிறார். ஒருவர் பொய சொல்ல்லாம் சில் நூறு பேர்கள் சேர்ந்து ஒரே மாதிரி பொய்யை சொவார்களா என்று அவர் யோசிக்கட்டும். அந்தக் கட்டுரை ஒருவரின் எழுத்து என்றாலும் பல நூறு பேரின் உணர்வு என்பதை இப்போதும் கூட அவர் புரிந்த்தாக தெரியவில்லை.

அவர் பேராசிரியர்களிடம் அவமரியாதை என்ன பேசினார் ? எப்படி பேசினார் என்பது முழு பாகியாத் வளாகத்திலும் இப்போதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி எல்லாம் தான் பேசவில்லை என்று அப்பாவித்தனம் காட்டுகிறார். ஆள் மால்தார் மட்டுமல்ல நல்ல மாய்மாலக்கார்ரும் கூட என்பதையே இது காட்டுகிறது. தன்னைப் பற்றி பொய்யாக சொல்ல்ப்படுகிற செய்திகளால் தனது பாவங்கள் ஐஸ் கட்டி போல கறைந்து போகும் என்று பஞ்சாயத்துக்கு வந்த அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்திடம் புலம்பினாராம். அப்படி எல்லாம் எளிதில் கரைந்து போய்விடக் கூடிய அளவிலா அவரது நடவடிக்கைகள் அமைந்தன என்று அவர் எண்ணிப் பார்க்கத் தயாராக இல்லை.

கமாலுத்தீன் ஹஜ்ரத், பிஎஸ்பி ஹஜ்ரத், ஆகிய இருவரிடமும் “ நீங்களா விலகிக்குங்க இல்லைன்னா நாங்க கடிதம் அனுப்பி விடுவோம் என்று ஹாஷிம் மிரட்டிய சொற்கள் அவ்வளவு எளிதில் அழித்து விடக்கூடிய சொற்கள் அல்லவே!.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் இன்றும் தமிழகம் எங்கும் சுற்றி தீன் முழக்கம் செய்து வரும் பிஎஸ்பி ஹஜ்ரத்திடம் உங்களுக்கு இதய அறுவை சிகிட்சை நடந்திருக்கு, கண் அறுவை சிகிட்சை நடந்திருக்கு அதனால போதும் நீங்க விலகி விடுங்கள் என்று ஹாஷிம் சொன்ன போது, என்னுடைய ஆரோக்கியம் என்னெனு எனக்குத் தெரியுங்க! உங்க தகப்பனார் இருந்தால் என்னை வெளியே அனுப்புவாரா என்று பிஎஸ்பி ஹஜ்ரத மன்றாடியது மறக்க்கூடிய விஷயமா? மௌலானா யாகூப் சாஹிபை விட உடல் ஆரோக்கியத்தோடும் சிந்தனை தெளிவோடும் தானே பிஎஸ் பி ஹ்ஜரத் இப்போதும் இருக்கிறார்? உடல்லிருந்து உயிரைப் பிரித்தெடுப்பது போல்ல்லவா இந்தப் பெருமக்களை பாகியாத்திலிருந்து வெளியே எறிந்தார் ஹாஷிம்?

கமாலுத்தீன் ஹஜ்ரத், பிஎஸ்பி ஹஜ்ரத், ஷப்பீர் அலி ஹஜ்ர்த ஆகியோர் யாகூப் விஷாரமியை விட தகுதியிலும் தரத்திலும் குறைந்தவர்களா என்ன? ஹாஷிமை வைத்து குரங்காட்டு வித்தை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த பெருந்தகைகளுக்கும் நியாயம் செய்யப்பட்ட்தாக பேச துணிகிறார்கள்! என்ன அக்கிரம்ம் இது? கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் திண்டுக்கல்லில் மகன் ரஷீது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் காஷிபுல் ஹுதாவின் பிரதிநிதிகளாக அவரை அணுகியவர்கள், பாகியாத்தில் மீண்டும் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு ஹாஷிமிடம் அவர் கேட்பது போல ஒரு கடித்த்தை தயார் செய்து எடுத்துக் கொண்டே அவரிடம் சென்றார்கள். நீங்களா என்னை வந்து கூப்பிட்டு விட்டு இது என்ன நான் கேட்பது போல கடிதம் கேட்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை என ஹஜ்ரத் மறுத்து விட்டார்கள் என்பதுதான் வரலாறு. பித்தலாட்டப் பேர்வழிகள் ஹஜ்ரத்தை நாங்கள் அழைத்தோம் அவர் தான் வரவில்லை என்று கதை விடுகிறார்கள்.

பாகியாத்தில் நிகழ்ந்த இத்தனை வேதனைகளுக்கும் காரணமாக இருந்து விட்டு இதிலெல்லாம் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, எல்லாம் முதல்வர்களின் ஆலோசனிகளின் படிதான் நடந்த்து பொம்மை முதல்வரின் மீது ஹாஷிம் பழி போடுவதும். பச்சைக் குழந்தை போல எல்லாவற்றையும் முதல்வரிடம் கேளுங்கள் என்று முதல்வரை நோக்கி ஹாஷிம் கைகாட்டுவதும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இணையற்ற நாடகம்.

பாகியாத்தின் முதல்வர் பெயரில் காஷிபுல் ஹுதா வெளியிட்ட அறிக்கையில் மௌலான உஸ்மான் முஹ்யித்தீன் ஹஜ்ரத்தின் ஓவியத்தை ஒத்த புகழ்பெற்ற அந்த கையெழுத்தை தவிர மற்றதெல்லாம் காஷிபுல் ஹுதாவின் சவளைப் பிள்ளைகளின் வாந்தியே என்பது எனக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு தெரியும். ஹாஷிம் என்ற டிரில் மாஸ்டர் போடச் சொன்ன இட்த்தில் பாழாய்ப் போன அந்தக் கையெழுத்தைப் போடுவதை தவிர அவரால் வேறு நன்மை என்ன செய்ய முடிந்திருக்கிறது ?

பாகியாத்தின் முதல்வர் பதவியை இவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை தான் இவர்களது சிந்தனைத் தொட்டி இக்பால் காஸிமி 25 காசுக்கு மதிப்பில்லாத்து என்று சொல்லிவிட்டாரே!

(இக்பால் காஸிமி ஒரு பெட்டிசன் ரைட்டர் என்ற சொல் காஷிபுல் ஹுதாவிலிருந்துதான் எனக்கு கிடைத்தது. அவரது விஷம்ம் எப்படிப்பட்ட்து என்பதற்கு இன்னொரு உதரணம். தற்போது பாகியாத்தில் துணை முதல்வரக திணிக்கப் பட்டுள்ளவர் குறீத்து மூன்றாம் வகுப்புக்கு கூட பாடம் நட்த்த தகுதியற்றவர் என்று அவர் விமர்ச்சித்த்துள்ளதாகும். ஹாஷிம் தன்னுடைய பேட்டியில் இக்பால் காஸிமியை முத்லவராக்கினால் பிரச்சினை சரியாகி விடும் என்று தற்போதைய முதல்வர் கூறியதாக குறிப்பிட்டுள்ளதே முதல்வர் பதவி குறித்து பாகியாத்திற்குள் நடைபெற்ற ஒரு பனிப்போரை பறை சாற்றுகிறது.)

பிஎஸ்பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ர முதல்வராக இருக்கும் பொழுது – கல்லூரியின் அட்மிஷன் நடந்து கொஅண்டிருக்கிற நேரத்தில் ஒரு பையன் வருகிறார். என்ன வகுப்புக்கு வந்திருக்கிறாய ? என்று முதல்வர் கேட்கிறார். நான் படிக்க வரவில்லை உஸ்தாதாக வ்ந்திருக்கிறேன், காஷிபுல் ஹுதாவிலிருந்து என்னை அனுப்பி விட்டார்கள் என் பெயர் அப்துல்லாஹ் மக்கி என்று அந்தப் பையன் சொன்னதை கேட்டு முதல்வர் அதிர்ந்து நிற்கிற போது அந்தப் பையன் சொன்னார் “ உ:ங்களுக்கு போன் வரும்”

போன் வந்த்து இவரை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஹாஷிமிடமிருந்து உத்தரவு வந்த்து, அவர் உஸ்தாதாக சேர்த்துக் கொள்ளப் பட்டார். இது தான் பாகியாத்தின் நடை முறையில் இருந்து ஆசிரியர்ப் சேர்ப்பு நிலவரம்.

ஷாபி சட்ட பிரிவின் சாதாரண் அடிப்படை நூலான “உம்த்துஸ் ஸாலிக்” கூட அவருக்கு சரியாக நட்த்த தெரியவில்லை என்ற புகார் அவர் மீது பல முறை சொல்லப்பட்ட்து. காஷிபுல் ஹுதாவிலிருந்து தூக்கி பாக்கியாத்த்திற்குள் ஆசிரியராக வீசப்பட்ட அனைவருடைய நிலையும் இதுதான் என்று கூறிய பாகியாத்தின் ஆசிரியர் ஒருவர் கூறினார். சின்னப் பையன்களை பாகியாத்தின் உஸ்தாதாக பெரிய ஹ்ஜரத் அனுப்பியது சரியல்ல என்று காஷிபுல் ஹுதாவில் இருக்கிற பேராசிரியர் ஒருவரே கூறினார்.

எங்க ஆட்களை மக்காவிலே கூப்புட்டாங்க.. மதீனாவிலே கூப்புட்டாங்க.. ஜெரூஸலத்துல கூப்பிட்டாங்க என்று இவர்கள் தங்களைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளட்டும். இலவசமாக பேப்பரும், அச்சுக் கூலி ஓசியிலும் கிடைக்கிற போது இதுவல்ல இதற்கு மேலும் கூட அவர்கள எழுதுவார்கள். அதில் நமக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் வடகரை ஷர்புத்தீன் ஹஜ்ரத்துக்கும் இவர்களில் நூறு பேர் கூட நிகராக மாட்டேர்களே! இவர்களால் கூட அதை மறுக்க முடியாதே! தமிழகத்தின் ஆலிம்கள் இந்த ஒப்பீட்டை மறுக்க மாட்டாகளே!

பாகியாத்தின் முதல்வர்களை கணக்குப் பிளைகளை விட கேவலமாக நட்த்தி விட்டு இப்போது ஹாஷிம் பொறுப்பு முழுவதையும் முதல்வரின் மீது சுமத்த முற்படுகிறார், அனைத்துக்கும் அவர் தான் காரணம் தான் ஒரு அப்பாவி என்றும் அவர் தன்னைச் சார்ந்தவர்களிடம் சாதிக்க முயல்கிறார். ஆனால் அவரது இயல்பை அறிந்த யாருக்கும் என்ன நடந்திருக்கு என்பதை யூகிக்க் அதிக நேரம் பிடிக்காது.

பாகியாத்தின் மூத்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்த்தைப் பற்றி கூறும் ஹாஷிம்“ அப்போது பாகியாத் யுனிவர்ஸிடியின் கீழ் இருந்த்தால் அவர்கள் பணி ஓய்வு பெற்றுச் சென்றனர்” என்று கூறுகிறார். என்ன வடிகட்டிய அயோக்கியத்தனமான சொல்லாடல் இது? வஞ்சகம் நிறைந்த யூத அரசியல் தந்திரங்களை தோற்கடித்து விடக்கூடிய வார்த்தைகள் அல்லவா இவை? இந்த வார்த்தைகளை ஜமாத்துல் உலமாவின் மூத்த ஆலிம் பெருந்தகைகள் உச்சுக் கொட்டி கேட்டு விட்டு வந்தார்களாம்.! நல்ல வேளை இந்த பஞ்ச தந்திர பஞ்சாயத்துக் குழுவில் ஒரு பாகவி கூட இருக்கவில்லை.

எத்தனை வலி மிகுந்த நாட்கள் அவை? பாகியாத்தை தங்களது உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தகைகளை உயிரோடு அவர்களின் தோலை உரிப்பது போல்லலவா பிரித்தெடுத்தார்கள்? எல்லாம் யாகூப் விஷாரமியின் விகார விருப்பங்களுக்கேற்ப நிகழ்ந்த தந்திரங்கள் அல்லவா அவை?

பாரம்பரியமிக்க ஒரு சிறந்த நிறுவனத்தை வழி நட்த்த இந்த குறுக்கு வழிகள் அவருக்கு எதற்கு என்பது தான் நமது கேள்வி.

ஹாஷிமுக்கும் யாகூப் மௌலானாவுக்கும் தமிழக பாகவிகளை கண்டு அப்படி என்ன பயம்? அல்லது வெறுப்பு? பாகியாத்திற்கு நன்மை செய்வதாக இருந்தால மௌலானா யாகூப் சாஹிப் தனது கருத்தை வலியுறுத்த பாவிகளின் ஒரு கூட்ட்த்திற்கு நியாயப்படி அழைப்பு விடுத்துப் பார்க்கட்டுமே! “அமீரே ஷரீஅத்தின்” அடையாளம் வெளிச்சத்திற்கு வந்து விடுமே! பாகவிகளின் ஒன்று கூடலை தடுக்க ஏன் இத்தனை தகிடுத்த்தங்களை கையாள வேண்டும்?

இது பாகியாத்தோடு தொடர்புடையை ஒரு பிரச்சினை மட்டுமல்ல. தமிழகத்தை நிழல் வஹாபிஸப்படுத்தும் ஒரு மாற்றுத்திட்ட்த்தம் என்ற வகையில் இது தமிழக மதரஸாக்கள் மற்றும் ஆல்களின் பிரச்ச்னையுமாகும்.

இவர்களை முழுமையாக அடையாளம் காணும் ஒரு ஆய்வில் நான் தீவிரமாக இறங்கியிருக்கிறேன். சுமார் இருபது வருடங்களாக சன்னம் சன்னமக இவர்கள் எப்படி ஊடுறுவியுள்ளார்கள். அதுவு ஷரீஅத் பாதுகாப்பு என்ற பெயரிலும் காதியானிய்யத் எதிர்ப்பு என்ற பெயரிலுமே எவ்வளவு குயுக்தியோடு செயல்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்த்யாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பிடித்த முடை என்று நான் அக்க்ல்லூரியை குறிப்பிட்ட்து யோசிக்காமல் சொன்ன வார்த்தை அல்ல.

தென்னிந்தியாவின் தீன் கல்வியின் கலங்கரை விளக்கான அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னேற்றத்தை முடக்கியவர்கள் என்பதனால் மட்டுமல்ல. தமிழகத்தை மாசுபடுத்திய வஹாபிஸ சாத்தான்களுக்கு ஆரம்பாக கால ஆசீர்வாதம் வழங்கியவர்கள் இவகளே என்பதும் தான் அதற்கு காரணம்.

தமிழக அரபுக்க் கல்லூரிகளிலேயே திரு பிஜே வின் பிரச்சாரத்திற்கு இடம் கொடுத்த ஒரே அரபிக்க்ல்லூரி காஷிபுல் ஹுதா தான். காஷிபுல் ஹூதாவிலிருந்து வெளியேறிய பலரும் திரு பிஜே வின் கூத்துப் பட்டறையில் உருவேற்றப் பட்டவர்களே! “சமாதி வழிபாடு” என்ற சொல்லாடல் காஷிபுல் ஹுதாவிலும் அதைச் சார்ந்த் இதழிலும் சகஜமாக பார்க்க முடியும். திருவாளர் பிஜே வின் எச்சமே அது.

ஷரீஅத்திற்காக போராடுவதாக மார் தட்டுகிறார்களே! திரு பிஜே ஜகாத் விசயத்தில் செய்த முரண்பாட்டிற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேட்டால் , விளக்கம் எழுதினார்களாம். இவர்கள் கொடுக்கிற விளக்கெண்ணய விளக்கங்கள் பற்றி யார் கேட்ட்து? திரு பிஜே சமூக அரங்கிலுருந்து ஒதுக்கி வைக்கிற முயற்ச்சியில் ஜமாஅத்துல் உலமாவிலிருந்து ஏன் முரண்பட்டீர்கள் என்பதற்கு எந்த பதிலையும் காணோம்.

ஹைஅத்துஷ் ஷரீஅத்தின் வசூலையும் இலாபத்தையும் பார்த்துக் கொண்ட்து மட்டுமே காஷிபுல் ஹுதாவின் பணி. அதில் இறங்கியப் போராடியவர்கள் வேறு. ஒரே ஒரு கூட்டம் அங்கு நடந்த்தை வைத்து தங்களை வஹாபிஸத்திற்கு எதிராக போராடியதாக கூறிக்கொள்கிறார்கள். அமல்களின் சிறப்பு நூலில் திரு பிஜே கை வைக்கிற வரை இவர்களும் அவரது கூட்டணியிலேயே இருந்தார்கள் என்பதே உணமை.


பாகியாத்தின் வரலாற்றை யார் எழுதுவது?

பாகியாத் எப்போது தொடங்கப்பட்ட்து என்பதில் கருத்து வேறுபாடு உள்ளதாம். பாகியாத் நிறுவனர் அஃலா ஹ்ஜரத்திம் மஸ்லக் என்ன வென்பதில் கருத்து வேறுபாடு எழுகிறதாம். இதுவெல்லாம் யாருக்கு? யாகூப் விஷாரமியை ஒத்த வேதாந்திகளுக்குத்தான் இந்தச் சந்தேக சனியெனல்லாம்? பாகவிகளுக்கும் தமிழக் மக்களுக்கும் இதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களாக உருவாக்கிக் கொண்ட சந்தேக்க் குளத்தில் நீச்சலிடித்துக் கொண்டு ஏதோ முத்துக்களை கண்டெடுத்த்து போல சில உருது பக்கங்களை காப்பி செய்துள்ளார்கள். தங்களிடம் இது பேல நூற்றுக்கணக்கான் காகித ஆதாரங்கள் அல்ல உயிருள்ள ஆதாரங்கள் இருக்கின்றன, அதை எல்லாம் கொண்டு வரத்தான் போகிறோம் என்று லிபாஸின் பாகவிகள் கூறினார்கள். பார்க்கலாம். இந்த விவாதம் தொடங்குவது பாகியாத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் சில திருட்டு முயற்சிகளை வெளிச்சப்படுத்தக் கூடும்.

அப்துர ரஹீம் ஹஜ்ரத் – தேவ்பந்தில் ஓதிவிட்டு பாகியாத்திற்கு வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பாகியாத் தொடங்கும் போது ஆசிரியராக இருந்தவரல்ல பாகியாத்தில் ஓதிவிட்டு தேவ்பந்திற்கு சென்றவர். அரபி மொழி அல்லாத மொழிகளில் ஜும்ஆ குத்பா தொடர்பான சட்டப் பிரச்சினையிலும் மற்ற சில விசயங்களிலும் தேவ்பந்தின் நிலைக்கு மாற்றமாக நின்று பாகியாத்தின் சுயச் சார்பை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல் மௌலானா எஸ் எஸ் அப்துல் காதிர் ஹஜ்ரத் தப்லீக்கை தான் விரும்பியதாக சொன்னாலும் பாகியாத்தில் தப்லீக் திணிக்கப்பட்டிருந்த்து அல்லது மாணவர்கள் தப்லீக் செல்லும் வழக்கம் பாகியாத்தில் இருந்த்து என்று எங்கும் சொல்லவில்லை. இன்னும் சொல்வதானால் பாகியாத்தின் பெருமைமிகு முதல்வராக் சுமார் 17 ஆண்டுகள் இருந்த பேரறிஞர் ஷைகு ஆதம் ஹஜ்ரத் அவர்கள் தப்லீக் அமைப்பிலிருந்த சில வாஹாபிஸ செயல்பாடுகல் காரணமாக அதற்கு எதிரான தீவிரமான நிலைப் பாட்டை கொண்டிருந்தார்கள் என்பதை தமிழ உலமா வட்டாரம் அறியும்.
பாகியாத் குறித்த வரலாற்றை எழுத பாகியாத்தில் யாரும் இல்லையா என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது. முந்தா நாள் பெய்த மழையில் முளைத்த இவர்கள் மூலம் தான் பாகியாத் தன்னுடைய அறிக்கையை வெளியிட வேண்டியிருக்கிறது என்பதே பாகியாத்தை எந்த இட்த்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள போதுமே!

முதலில் “தாமத் பாகாதுஹு”வை ஒழுங்காக எழுதச் சொல்லுங்கள் பிறகு பாகியாத் என்று எழுதுவதற்கு அவர்கள் தயாராகட்டும் என்று ஒரு பல்கலை கழக பேராசிரியர் என்னிடம் சொன்னார். ( பின்குறிப்பாக ஸல்ல்லஹ் அலைஹி வஸல்லம் ரலியல்லாஹு அன்ஹு என்ற உதாரணத்தை சொல்லவும் என்றும் அவர் கூறத் தவற வில்லை.)

பக்தியிலும் பண்பிலும் தங்களை மட்டுமே தூயமைப்படுத்திக் காட்டும் இயல்பு வஹாபிஸத்தின் மோசமான அடையாளங்களில் ஒன்று. பாகியாத்தின் தற்போதைய முதல்வரைப் பார்த்து “ நீ ஒரு முனாபிக்” என்று செயலாளர் ஹாஷிமைச் சொல்ல வைத்த்து அந்த இயல்பு தான். காஷிபுல் ஹுதாவைச் சார்ந்தவர்கள் பாகவிகளை பக்தியற்றவர்கள் பண்பற்றவர்கள் என்றும் ஏசுவதற்கும் கூட அது தான் காரணம்.

ஆக்ரமிப்பில் பாகியாத் கட்டுரை, சரியான செய்தியை சரியான முறையில் சரியான இட்த்திற்கு கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது என்பதே எங்களுக்கேற்பட்ட திருப்தி. பாகியாத்தில் மேற்கொள்ளப் பட்ட சில களவானி முயற்சிகளை அமபலப்படுத்தியதோடு அதை தடுத்து நிறுத்தும் ஒரு போராட்ட்த்திற்கும் கட்டுரை முன்னுரை எழுதியிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கான நிறைவுச் செய்தியை எழுத் வேண்டிய கடமை பாகவிகளுடையது.

1 comment:

  1. பாக்கியாத்தின் ஃபத்வாக்களில் இந்த காஷிஃபுல் ஹுதா கோஷ்டி செய்த தில்லுமுல்லுகள் என்ன?

    ReplyDelete